இந்தியா மற்றும் கனடா இடையிலான விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தமான (CEPA) தொடர்பான ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நவம்பர் 11 முதல் 20 வரை புதுடெல்லியில் நடைபெற்றது.
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் கனடாவின் சர்வதேச வர்த்தக அமைச்சர் மனிந்தர் சித்து ஆகியோர் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் சமநிலையான ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் பொருட்கள் வர்த்தகம், சேவைகள் வர்த்தகம், மூல விதிகள், வர்த்தகத் தீர்வுகள், அறிவுசார் சொத்துரிமை மற்றும் முதலீட்டு மேம்பாடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
பேச்சுவார்த்தையின் நிறைவில், இந்திய வர்த்தகச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் மற்றும் கனடாவின் சர்வதேச வர்த்தகத் துணை அமைச்சர் க்ளென் பர்வ்ஸ் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் விவசாயிகள், தொழில்துறையினர், வணிக நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (MSMEs) புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பதுடன், விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தவும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தவும் இந்த ஒப்பந்தம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திவாஹர்
