குறிப்பிட்ட ரகசியத் தகவலின் அடிப்படையில், மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறையின் (CGST) ஃபரிதாபாத் ஆணையரகம், 16.11.2026 அன்று ஹரியானா மாநிலம் ரேவாரியில் உள்ள ராம் கர் சாலையில் அமைந்துள்ள ஒரு நிறுவனத்தின் வளாகத்தில் சோதனை மேற்கொண்டது.
அந்த நிறுவனம், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு செஸ் (Health Security and National Security Cess – HSNS Cess) செலுத்தாமல் பான் மசாலா தயாரித்து வருவதாகச் சந்தேகிக்கப்பட்டது.
சோதனையின்போது, ‘தன்ராஜ்’ (Dhanraj) என்ற பிராண்டின் பான் மசாலா தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் நான்கு செங்குத்து பவுச் பேக்கிங் இயந்திரங்கள் நிறுவப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் HSNS செஸ் சட்டம், 2025-ன் கீழ் கட்டாயப் பதிவைப் பெறவில்லை என்பதும், சட்ட விதிகளின்படி தனது பேக்கிங் இயந்திரங்களை அறிவிக்கவில்லை என்பதும் தெரியவந்தது.
HSNS செஸ் வரி 01.02.2026 முதல் அமலுக்கு வந்துள்ளது. இவ்வரி பான் மசாலா உற்பத்தியாளர்களிடம் நிறுவப்பட்டுள்ள இயந்திரங்களின் உற்பத்தித் திறனை அடிப்படையாகக் கொண்டு விதிக்கப்படுகிறது.
இந்தச் சட்டத்தின் விதிகளின்படி, செலுத்தப்படாமல் ஏய்க்கப்பட்ட HSNS செஸ் வரியின் மொத்தத் தொகை ரூ.116.48 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், சட்டப்படி அறிவிக்கப்படாத இயந்திரங்களைப் பயன்படுத்தி பான் மசாலா தயாரிப்பது HSNS செஸ் சட்டம், 2025-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இயந்திரங்களின் உரிமையாளரும் இயக்குநருமான ஒருவர் கைது செய்யப்பட்டு, அதிகார வரம்பிற்குட்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திவாஹர்
