இந்திய பாதுகாப்பு அமைச்சகம் (MoD), இஸ்ரேல் நாட்டின் Israel Aerospace Industries (IAI) நிறுவனத்துடன் ₹1,976.40 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம், இந்தியக் கடற்படைக் கப்பல்களில் பயன்படுத்தப்படும் Barak Point Defence Missile System என்ற ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்துவதற்கும், காலாவதியான தொழில்நுட்பங்கள் மற்றும் உதிரிபாகங்களை நவீனப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் 2026 நவம்பர் 18 அன்று புதுடெல்லியில் பாதுகாப்புச் செயலாளர் திரு. ராஜேஷ் குமார் சிங் அவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது. இது Other Capital Procurement Procedure என்ற கொள்முதல் நடைமுறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, Barak ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் வன்பொருள் (Hardware) மற்றும் மென்பொருள் (Software) ஆகிய இரண்டும் முழுமையாக மேம்படுத்தப்பட உள்ளன.
இதன் மூலம் இந்தியக் கடற்படைக் கப்பல்களின் வான் பாதுகாப்புத் திறன் அதிகரிப்பதுடன், வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறனும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் இந்தியக் கடற்படையின் பாதுகாப்புத் திறனை நவீனமயமாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
திவாஹர்
