108 அவசரகால மருத்துவ உதவி அழைப்பு மையத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆய்வு!

சென்னை, டி.எம்.எஸ். வளாகத்தில் செயல்பட்டுவரும் 108 அவசரகால மருத்துவ உதவி அழைப்பு மையத்திற்கு (Emergency Response Call Centre) நேரில் சென்ற முதலமைச்சர் விஜய் அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

​இந்த ஆய்வின்போது, முதலமைச்சர் பொதுமக்களுக்கு ஏற்படும் அனைத்து வகையான அவசர மருத்துவச் சூழல்களிலும் உதவுவதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் EMRI GHS அமைப்பால் இயக்கப்பட்டுவரும் பல்வேறு வகையான அவசரகால ஊர்திகளை நேரில் பார்வையிட்டார். மேலும், வரவிருக்கும் பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளம், புயல் மற்றும் தொடர் மழையினால் உண்டாகும் இயற்கைப் பேரிடர் சூழல்களில், அவசரகால மேலாண்மை சேவைகளை வழங்குவதற்காக ‘108’ அவசரகால ஊர்தி சேவைகள் பிரிவு மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

​அவசரகால ஊர்திகளில் வைக்கப்பட்டிருக்கும் மருத்துவ உபகரணங்கள், மீட்புக் கருவிகள், புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான உபகரணங்களையும் பார்வையிட்டதோடு, ‘108’ அவசரகால மருத்துவ உதவி அழைப்பு நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் அணுகல் முறை, அழைப்பு மையத்திற்குள், புவியிட அமைப்புக் கருவி (GPS) நகர்வுகளின் அடிப்படையில் அழைப்பு மையத்திலிருந்து அவசரகால ஊர்திகளுக்கு சேவை ஒதுக்கீடு செய்யப்படும் நடைமுறை ஆகியவற்றை முதலமைச்சர், அவசரகால உதவி அழைப்பு மைய அலுவலரிடம் (Emergency Response Officer) கேட்டறிந்தார்.

Leave a Reply