விமானப் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் தற்சார்புத் திறனை வலுப்படுத்துகிறது இந்திய விமானப்படை!

இந்திய விமானப்படையின் 13-வது தளவாடப் பழுதுபார்ப்புப் பிரிவு தனது 50-வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, புதுதில்லியில் விமானப் பாதுகாப்புத் தொழில்நுட்பக் கருத்தரங்கை நடத்தியது.

ஏர் மார்ஷல் யல்லா உமேஷ் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் நவீன ரேடார் தொழில்நுட்பம், குவாண்டம் உணர்கருவிகள் மற்றும் உள்நாட்டுப் பராமரிப்புத் திறன் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், ஹைட்ரஜன் எரிபொருள் கலன் மூலம் விமானப்படை ரேடார்களை இயக்கும் தொழில்நுட்பமும் வெற்றிகரமாகச் சோதித்துக் காட்டப்பட்டது. இது தூய்மையான எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறையின் தற்சார்பை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக அமைந்தது.

Leave a Reply