கடந்த 2026ஆம் ஆண்டில் இதுவரை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஆறு ரகசிய போதைப்பொருள் தயாரிப்பு ஆய்வகங்களைக் கண்டறிந்து அழித்துள்ளது. இதன் மூலம் 130.2 கிலோ மெபெட்ரோன் மற்றும் 1,465.4 கிலோ/லிட்டர் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகள் தொடர்பாக மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தல் வலையமைப்புகளை ஒழித்து, ‘போதைப்பொருள் இல்லாத பாரதம்’ என்ற தேசிய இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
திவாஹர்
