இந்திய கடற்படைக் கப்பலான சூரத், ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் துறைமுகத்தை 2026 நவம்பர் 8-ம் தேதி சென்றடைந்தது. இந்தியா, ஓமன் இடையேயான கடல்சார் பயிற்சியின் 15-வது பதிப்பிற்காக இந்தப் பயணத்தை சூரத் கப்பல் மேற்கொண்டுள்ளது. இந்திய கடற்படை, ஓமனின் ராயல் கடற்படை ஆகியவை இணைந்து கடல்சார் பயிற்சியை மேற்கொள்கின்றன. கடற்சார் பயிற்சி குறித்த ஆலோசனை, விளையாட்டு நிகழ்ச்சிகள், இரு நாட்டு வீரர்களும் பரஸ்பரம் தங்களது பயிற்சிகள் குறித்து கலந்துரையாடும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இது இருநாட்டு வீரர்களின் பயிற்சித் திறனை மேம்படுத்தவும், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவும் நல்வாய்ப்பாக அமையும். கடற்சார் பயிற்சி தொடர்பாக இந்தியா, ஓமன் இடையே நீண்டகால நட்புறவு நீடித்து வருகிறது. இதை மேலும் வலுப்படுத்த இந்த பயிற்சி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிராந்தியங்களின் பாதுகாப்பு, வளர்ச்சிக்கான பரஸ்பர முன்னேற்றம் என்ற இந்திய அரசின் தொலைநோக்கு பார்வைக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக இந்த பயிற்சி அமையும் எனவும் கூறப்பட்டுள்ளது. 2025 நவம்பர் 24-ம் தேதி அன்று நடைபெற்ற ராணுவ இணை கூட்டுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு இந்தியா- ஓமன் இடையேயான இந்த கடற்சார் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திவாஹர்
