குடியரசு துணைத்தலைவர் தூத்துக்குடியில் நவம்பர் 11 அன்று பயணம் மேற்கொள்கிறார்

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் 2026 நவம்பர் 11 அன்று தூத்துக்குடியில் பயணம் மேற்கொள்கிறார்.

அப்போது தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி நிறுவனத்தின் 105-வது  நிறுவன தின கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்க உள்ளார்.

குடியரசு துணைத்தலைவர் தான் பயின்ற வ உ சிதம்பரம் கல்லூரியின் 75-ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பின் கொண்டாட்டங்களிலும் கலந்துகொள்கிறார்.   

Leave a Reply