அருணாச்சலப் பிரதேசத்தின் பொம்டிலாவில் உள்ள துப்சோக் காட்செல் லிங் ஆலயத்தில் சாக்கியமுனி புத்தரின் புனிதப் பொட்கள் காட்சிப்படுத்தப்பட்டதன் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புத்தருக்கு தங்களுடைய மரியாதையை செலுத்த சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முதல் 2 நாட்களில் புனிதப் பொருட்கள் முன்பாக ஆசீர்வாதங்களைப் பெற மொத்தம் 11,969 பக்தர்கள் ஆலயத்திற்கு சென்று பிரார்த்தித்தனர்.
பெருமளவிலான பக்தர்களின் வருகை, முக்கியத்துவமிக்க புனிதப் பொருட்கள் மீது பௌத்தர்கள் கொண்டுள்ள ஆழமான நம்பிக்கையையும், ஆன்மீக பக்தியையும் வெளிப்படுத்தியது.
இக்கண்காட்சியை மத்திய கலாச்சார அமைச்சகம், புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம், அருணாச்சலப் பிரதேச அரசு, புதுதில்லியில் உள்ள சர்வதேச புத்த மத கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் புனிதப் பொருட்களை பொதுமக்கள் 2026 நவம்பர் 13 வரை தரிசிக்கலாம். இதன்மூலம், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அங்கு சென்று பிரார்த்தித்து மரியாதை செலுத்த வாய்ப்பு ஏற்படுகிறது.
2026 நவம்பர் 11 அன்று அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் 5-கலக்டாங் சட்டப்பேரவை தொகுதியைச் சேர்ந்த பக்தர்களும், நவம்பர் 12 அன்று, 6-புர்கான்-திரிசினோ சட்டப்பேரவை தொகுதியைச் சேர்ந்த பக்தர்களும், நவம்பர் 13 அன்று இதர மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் அம்மாவட்டங்களில் உள்ள ஆயுதப்படை, மத்திய ஆயுத காவல் படையைச் சேர்ந்த வீரர்களும், மற்ற நாட்களில் தரிசனம் செய்யாதவர்களும் ஆலயத்திற்குச் சென்று பிரார்த்திக்கலாம்.
திவாஹர்
