தேசிய நெடுஞ்சாலைகளில் மக்களை மையமாகக் கொண்ட சேவைகளை மேம்படுத்துவதற்கான ஒரு முன்னோடி முயற்சியாக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுங்கச்சாவடிகளில் உள்ள பொதுக் கழிப்பறை வசதிகள், பிரத்யேக வாகன நிறுத்துமிடங்கள் ஆகியவற்றை மேம்படுத்துதல், பராமரித்தல், திறன்மிகு முறையில் கண்காணிப்பது ஆகியவற்றுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைப் பயனாளர்களுக்கு தூய்மையான, பாதுகாப்பான வசதிகளை உறுதி செய்வதற்காக, தற்போதுள்ள வசதிகளை மேம்படுத்துதல், வழக்கமான தூய்மைப் பணி, தொழில்நுட்பத்தின் வழியாக கண்காணிப்பு போன்ற தரநிலைகளை இந்த வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன.
மாற்றுத் திறனாளிகள், பெண்கள், இரவில் தங்கும் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், இந்த வழிகாட்டுதல்களில் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. சுங்கச்சாவடிகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்கள் மேம்படுத்தப்படுவதோடு, எதிர்கால மின்சார வாகன மின்னேற்றும் உள்கட்டமைப்பிற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திவாஹர்
