தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பெண் படுகொலை!-தமிழக அரசு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே முதலூரில் பெண் படுகொலை செய்யப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது.

முத்துகிருஷ்ணன் வீட்டிற்குள் புகுந்த நபர் அவரது மனைவி, மகன் மற்றும் 2 மகள்களை தாக்கியுள்ளனர். மேலும் அந்த 2 சிறுமிகளும் கடத்தப்பட்ட நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலில் முத்துகிருஷ்ணனும் அவரது மகனும் படுகாயமடைந்த நிலையில் அவரது மனைவி மேரி ரெஜிலா உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து, கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை கிடைக்க வழி வகுக்க வேண்டும்.

தமிழகத்தில் கொலைகள் நடைபெறாமல் இருக்கும் வகையில் காவல்துறையினரின் நடவடிக்கை அமைய வேண்டும்.

குறிப்பாக குற்றம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கச் செய்து, குற்றங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதுகாப்பும் கொடுக்க வேண்டும்.

தமிழக அரசு மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை கடுமையாக்கி செயல்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply