மத்திய செயலகச் சேவைகள் மன்றத்தின் ‘சிஎஸ்எஸ் ஷீல்ட்’ முன்முயற்சிக்கு மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டு.

சேவை விதிகளை ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மேலும் நன்மையளிக்கும் வகையில் மாற்றுவதற்கான முயற்சிகளைத் தொடர வேண்டும் என்று மத்திய பணியாளர் நலன், ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய செயலகச் சேவை மன்றமான சிஎஸ்எஸ் சார்பில் செயல்படுத்தப்படும் ‘சிஎஸ்எஸ் ஷீல்ட்’ முன்முயற்சியின் தொடக்க விழாவில் இன்று (05.09.2026) பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், இதுபோன்ற கூட்டு முயற்சிகள் திடீர் இழப்புகளின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் துணையாக நிற்கும் என்று கூறினார். துயரத்தில் இருக்கும் ஒரு குடும்பத்திற்குப் பலம் சேர்க்க சக ஊழியர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்று சேரும்போது, அது மிகவும் அர்த்தமுள்ளதாக அமைகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பணியின் போது உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்குப் பரஸ்பர நிதி ஆதரவு வழங்கும் ‘சிஎஸ்எஸ் ஷீல்ட்’ என்ற முன்முயற்சியின் தொடக்க நிகழ்ச்சியில், சிஎஸ்எஸ் மன்றத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பணியில் உள்ள அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, உயிரிழந்த இரு அதிகாரிகளின் குடும்பங்களுக்கு, நிதியுதவியை டாக்டர் ஜிதேந்திர சிங் வழங்கினார்.

Leave a Reply