குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 4 அன்று சண்டிகரில் பயணம் மேற்கொள்கிறார்.

குடியரசு துணைத்தலைவரும், பஞ்சாப் பல்கலைக்கழக வேந்தருமான திரு சி பி ராதாகிருஷ்ணன் 2026 செப்டம்பர் 4 அன்று சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார்.

அப்போது நவீன பகுப்பாய்வுக் கருவி வசதி, மத்திய கருவி ஆய்வகங்களில் மேம்பட்ட பகுப்பாய்வுக் கருவி வசதியை குடியரசு துணைத்தலைவர் தொடங்கி வைக்கிறார்.

பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, புதுமைக் கண்டுபிடிப்பு, புத்தொழில் சூழல் அமைப்பை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய நடவடிக்கையாக பஞ்சாப் பல்கலைக்கழகத் தொழில்நுட்ப புதுமைக் கண்டுபிடிப்பு மன்றத்தையும் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார்.

Leave a Reply