பனிச்சரிவு அபாயங்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பனிப்பாறை ஏரி உடைப்பால் ஏற்படும் வெள்ளம், பனிச்சரிவுகளின் அபாயங்கள் ஆகியவற்றிற்கு எதிராக இமயமலைப் பகுதி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தயார் நிலையை ஆய்வு செய்வதற்கான கூட்டம் புதுதில்லியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மத்திய உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன் தலைமைத் தாங்கினார். இதில் உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், சிக்கம், அருணாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள், மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், மத்திய நீர் ஆணையம், இந்திய வானிலை ஆய்வுத் துறை, பாதுகாப்பு புவி தகவல் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இமயமலைப் பகுதியில் உருவாகி வரும் பனிப்பாறை ஏரி உடைப்பால் ஏற்படக்கூடிய வெள்ள அபாயம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தல், பாதிக்கப்படக்கூடிய பனிப்பாறை ஏரிகள், பனி சூழந்த பகுதிகளைக் கண்காணித்தல், அதிக இடர்பாடு உள்ள இடங்களைக் கண்டறிதல், வெள்ளம் பாயும் பகுதி, உரிய நேரத்தில் எச்சரிக்கை விடுத்தல், மக்களை வெளியேற்றுவதற்கான தயார்நிலை, மீட்பு வழிமுறைகளை வலுப்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Leave a Reply