மும்பை சிஎஸ்எம்டி-லிருந்து சாவந்த்வாடி சாலை வரை புதிய ரயில் சேவை தொடங்கியது.

மும்பை – கொங்கன் பகுதி இடையே நேரடி ரயில் இணைப்பை ஏற்படுத்தும் வகையில் சத்ரபதி சிவாஜி மகராஜ் – சாவந்த்வாடி சாலை இடையே புதிய ரயில் சேவையை ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், மகாராஷ்ட்ரா துணை முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

சுமார் 510 கிலோமீட்டர் தொலைவிலான பகுதியைக் கடக்கும் இந்தப் புதிய ரயில் சேவை, மும்பைக்கும் கொங்கன் பகுதியில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களுக்கும் இடையே ஒரு முக்கிய நேரடி ரயில் போக்குவரத்துச் சேவையை அளிக்கும். இச்சேவை ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் ஆகிய மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பெரும் வசதியாக அமையும்.

Leave a Reply