குடியரசு துணைத்தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் நாளை ஆந்திரா பயணம்.

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், நாளை (2026 ஆகஸ்ட் 24) ஆந்திரப் பிரதேச மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் உள்ள முசுனூருக்குச் சொல்கிறார்.

தமது பயணத்தின் போது, குடியரசு துணைத்தலைவர் முசுனூருவில் உள்ள கோர்மெட் பாப்கார்னிகா தொழிற்சாலையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். அங்கு அவர், இந்தியாவின் முதல் மரபணு மாற்றப்படாத, அதிக வளர்ச்சித் திறன் கொண்ட பாப்கார்ன் மக்காச்சோளக் கலப்பின விதையை அறிமுகம் செய்கிறார். அத்துடன் விவசாயிகளுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்கும் அவர், வேளாண் துறை சார்ந்தவர்கள், பிற பங்கேற்பாளர்களிடையே உரையாற்றவுள்ளார்.

Leave a Reply