போதைப்பொருட்கள் மற்றும் மனோவியல் பொருட்களின் நாடுகடந்த கடத்தலுக்கு எதிரான தனது தொடர்ச்சியான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக, இந்தியாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு கணிசமான அளவு மெத்தம்பெட்டமைனை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்வதற்கான ஒரு பெரிய முயற்சியை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் முறியடித்துள்ளது.
16–17.08.2026 தேதிகளில் DRI நடத்திய புலனாய்வு சார்ந்த நடவடிக்கையில், நவா ஷேவா துறைமுகத்தில் ஏற்றுமதி சரக்கு ஒன்றிலிருந்து சுமார் 56 கிலோ தூள் வடிவிலான மெத்தம்பெட்டமைன் மீட்கப்பட்டது. இந்த சரக்கில் இருந்த 351 பைகளில் ஒன்றில், இந்த கடத்தல் போதைப்பொருள் மக்காச்சோளத்துடன் தந்திரமாகக் கலக்கப்பட்டிருந்தது. மீட்கப்பட்ட மெத்தம்பெட்டமைன், 1985 ஆம் ஆண்டின் போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் (NDPS) விதிகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.
விரைவான விசாரணையின் விளைவாக, இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஏற்றுமதியாளர் மற்றும் போக்குவரத்து/சரக்கு முகவர் அடையாளம் காணப்பட்டனர். ஏற்றுமதி சரக்கின் போக்குவரத்து மற்றும் சுங்க அனுமதிக்கு, அந்தப் போக்குவரத்து/சரக்கு முகவர் ஒரு வெளிநாட்டு வாங்குபவருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. கடத்தல் முயற்சியில் அவர்களின் பங்கின் அடிப்படையில், 1985 ஆம் ஆண்டு போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் (NDPS Act) கீழ் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அதிக அளவு மெத்தம்பெட்டமைனை மக்காச்சோளத்துடன் பிரிக்க முடியாதபடி கலந்து, அந்த சரக்கை ஒரு சாதாரண விவசாயப் பொருள் போல மாறுவேடமிடும் இந்த மறைக்கும் முறையானது , ஏற்றுமதியின் போது வழக்கமான பரிசோதனை மற்றும் கண்டறிதலில் இருந்து தப்பிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு தனித்துவமான செயல்முறையாகும் .
மெத்தாம்பெட்டமைன் என்பது தவறாகப் பயன்படுத்தப்பட்டு, அடிமையாவதற்கான அதிக வாய்ப்புள்ள, மிகவும் வீரியம் மிக்க ஒரு செயற்கை மனத்தூண்டி ஆகும். இதன் சட்டவிரோதப் பயன்பாடு, அதிகரித்த இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம், கிளர்ச்சி, சித்தப்பிரமை, மனப்பித்து மற்றும் பிற கடுமையான உடல்நலச் சிக்கல்கள் உள்ளிட்ட கடுமையான உடல் மற்றும் உளவியல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்; நீண்டகால அல்லது தொடர்ச்சியான பயன்பாடு, போதைப்பொருளுக்கு அடிமையாவதற்கும், உடல்நலம் மற்றும் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படுவதற்கும் வழிவகுக்கும்
திவாஹர்
