சத்தீஷ்கரில் திருத்தியமைக்கப்பட்ட பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள கிராமப்புறப் பகுதிகளில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், அகண்ட அலைவரிசையுடன் கூடிய தொலைத்தொடர்பு இணைப்புகளை விரைவாக அமைப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, தொலைத்தொடர்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் டிஜிட்டல் பாரத் நிதி, திருத்தியமைக்கப்பட்ட பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளது.

புதுதில்லியில் உள்ள சன்சார் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக டிஜிட்டல் பாரத் நிதி – தொலைத்தொடர்புத்துறை, சத்தீஷ்கர் மாநில அரசு, அம்மாநில பாரத்நெட் உள்கட்டமைப்பு நிறுவனம், பிஎஸ்என்எல், அம்மாநில தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றுக்கிடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் டிஜிட்டல் பாரத் நிதி அமைப்பின் நிர்வாக அதிகாரி திரு ஷியாமல் மிஸ்ரா, சத்தீஷ்கர் மாநில மின்னணு, தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் திரு அங்கீத் ஆனந்த், அம்மாநில பாரத்நெட் உள்கட்டமைப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு மயங்க் அகர்வால், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இயக்குனர் (நிறுவன வர்த்தகம்) திரு பாப்பா சுதாகர ராவ், தொலைத்தொடர்புத்துறையின் துணைத் தலைமை இயக்குநர் (அமலாக்கப்பிரிவு 1) திரு தினேஷ் குமார் கார்க் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

Leave a Reply