ஒரு கோப்பை அசாம் தேயிலை காலை உணவு மேஜைக்கு வருவதற்கு முன்பு அது நீண்ட தூரப் பயணத்தை மேற்கொள்கிறது. தேயிலைப் பறிக்கப்படும் தேயிலைத் தோட்டம், அவை பதனப்படுத்தப்படும் ஆலை, வணிகர்கள், சந்தைகள், இறுதியாக அசாமின் மிக முக்கியமான பயிர் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாறும் நகரம் என பல்வேறு நிலைகளைக் கடக்கிறது. இதற்கான போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் தேசிய நெடுஞ்சாலை 15-ல் 135.87 கிலோ மீட்டர் தொலைவிலான நான்கு வழித் தடங்களைக் கொண்ட குவஹாத்தி-தேஜ்பூர் வழித்தடத் திட்டத்திற்கான சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகம் சமர்ப்பித்த முன்மொழிவுக்குப் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இம்மாதத் தொடக்கத்தில் ஒப்புதல் அளித்தது.
அசாம், அருணாச்சலப்பிரதேசம் மாநிலங்களிலுள்ள பொருளாதார, சமூக, சரக்குப் போக்குவரத்து மையங்களுக்கானப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் இவ்வழித் தடம் திட்டமிடப்பட்டுள்ளது. 15.11 கிலோ மீட்டர் தொலைவிலான மங்கல்தோய் புறவழிச் சாலையைத் தவிர்த்து குவஹாத்திக்கு அருகே பைஹாட்டா சாரியாலியைத் தேஜ்பூருடன் இணைக்கும் வகையில் இது அமைக்கப்படும். இதற்கான மொத்த மூலதன செலவு ரூ.8,970 கோடியாகும்.
எம்.பிரபாகரன்
