இந்தியத் துணை குடியரசுத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்திற்கு விஜயம் மேற்கொள்வார். அப்பயணத்தின் போது, சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் நடைபெறும் தொடர்ச்சியான கல்வி, நினைவு மற்றும் இலக்கிய நிகழ்வுகளில் அவர் பங்கேற்பார்.
ஆகஸ்ட் 16 அன்று தனது பயணத்தின் போது, துணை ஜனாதிபதி செங்கல்பட்டு, காட்டங்குளத்தூரில் நடைபெறும் எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் (எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி) 22வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வார்.
நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநரான திரு. லா. கணேசனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சியும், சென்னை, டி. நகரில் உள்ள வாணி மஹாலில் நடைபெறுகிறது, அதிலும் அவர் கலந்துகொள்வார்.
பின்னர், இந்து முன்னணியின் நிறுவனரான மறைந்த திரு கே. ராமகோபாலனின் சிந்தனைகள் மற்றும் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட ‘Echoes of a Nationalist Mind’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், சென்னையில் உள்ள டி.ஜி. வைஷ்ணவ கல்லூரி அரங்கில் கலந்துகொள்வார்.
ஆகஸ்ட் 17 அன்று, திருவாரூரில் நடைபெறும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி கலந்துகொள்வார்.
அதன் பிறகு அவர், தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் ரூபி மற்றும் வெள்ளி விழா நிறைவு விழாக்களில் பங்கேற்பார்.
திவாஹர்
