பசுமை ஹைட்ரஜன், அது சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்தல், பயன்படுத்துதல், ஏற்றுமதி செய்வதில், இந்தியாவை உலகின் மையமாக உருவெடுக்கச் செய்யும் நோக்கில், மத்திய அரசு தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியான பசுமை ஹைட்ரஜன் மாற்றத்திற்கான உத்திசார் நடவடிக்கைகள், 2பி திட்டத்தின் கீழ், சுத்திகரிப்பு நிலையங்களுக்காக ஆண்டுதோறும், 30 கிலோ டன் என்ற அளவிலான பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் திறன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டங்கள் தனியார் நிறுவனங்களால், கட்டமைத்தல், சொந்தமாக்குதல் இயக்குதல் முறையின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. இதில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களே அதற்கான முதலீடுகளை மேற்கொள்கின்றன. உள்நாட்டு பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி & பயன்பாடு, இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தவும், இந்தியாவின் தூய்மை எரிசக்தி மாற்றம், நிகர-பூஜ்ஜியம் இலக்குகளுக்கு ஆதரவளிக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், மத்திய புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக் இதனைத் தெரிவித்துள்ளார்.
திவாஹர்
