பங்களாதேஷ் ரயில்வேக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள்.

பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலை, பங்களாதேஷ் ரயில்வேக்காகத் தயாரிக்கப்பட்ட முதல் 19 எல்.எச்.பி அகலப் பாதை ரயில் பெட்டிகள் அடங்கிய தொகுப்பை 2026 ஆகஸ்ட் 12 அன்று வழங்குகிறது.

இந்தத் தொகுப்பில் 3 குளிர்சாதன வசதியுடன் கூடிய படுக்கை வசதி, 3 குளிர்சாதனத்துடன் கூடிய இருக்கை வசதி, 11 குளிர்சாதன வசதி அல்லாத இருக்கை உள்ளிட்டவைகள் அடங்கியுள்ளன.

மேலும் பயணிகளின் வசதிக்காக சாய்வு நாற்காலிகள், சிசிடிவி, குழந்தைப் பராமரிப்பு அறை மற்றும் பிரார்த்தனைக்கான அறை போன்ற சிறப்பம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் இயக்கச் சூழலைக் கருத்தில் கொண்டு மேற்கூரை அமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஐரோப்பிய தரநிலைகளின்படி விபத்தை தாங்கும் வடிவமைப்பு மற்றும் 415 வோல்ட் மின் அமைப்பும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2015-16 இல் 120 பெட்டிகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 2024 ஆம் ஆண்டில் பெறப்பட்ட 200 பெட்டிகள் தயாரிப்பு ஆணையின் ஒரு பகுதியாக இந்த முதல் தொகுப்பு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

Leave a Reply