சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட விமானப் பயிற்சி நிறுவனமான அகாடமி ஆஃப் கார்வர் ஏவியேஷனுக்குச் சொந்தமான, செஸ்னா சி172 ரக விமானம், மகாராஷ்டிராவின் பாராமதி விமானத்தளத்தில் 09 ஆகஸ்ட் 2026 அன்று மதியம் 12:25 மணியளவில் ஓடுபாதை விட்டு விலகிச் சென்றது.
அந்த விமானம் பயிற்சி ஒன்றிற்காக இயக்கப்பட்டது. அந்த விமானம், விமானப் பயிற்றுவிப்பாளர் கேப்டன் சிராக் சசிகாந்த் டோய்ஃபோடேவின் கட்டளையின் கீழ் இருந்தது. மேலும் பயிற்சி மாணவர் அபிஜீத் ஜுந்த்ரே அதில் பயணம் செய்தார்.
திட்டமிடப்பட்ட பயிற்சி ஒத்திகைக்காக, விமானம் ஓடுபாதையில் நகர்ந்து சென்றது. பயிற்சியின் போது, விமானம் ஓடுபாதைக்குள் நுழைந்து, ஓடுபாதை 29-ன் தொடக்கப் பகுதியில் நிறுத்தப்பட்டது. அங்கு, பயிற்சி ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, விமானம் ஓடுபாதை 11-ன் தொடக்கப் பகுதியில் நிறுத்தப்பட்டு, மற்றொரு பயிற்சி ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
பயிற்சியின் போது, விமானத்தால் தார் ஓடுபாதைக்குள் செல்ல இயலவில்லை. அதன் விளைவாக, அது நீட்டிக்கப்பட்ட தார் பரப்பிலிருந்து விலகி, ஓடுபாதை 29-ன் தொடக்கப் புள்ளியைத் தாண்டி வலது பக்கமாக விலகிச் சென்றது. இதன் காரணமாக, அது ஓடுபாதையை விட்டு வெளியே சென்றது.
எந்தவொரு காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ இதில் பதிவாகவில்லை. விமானத்தின் சுழலி, இயந்திர மூடி, முன் தரையிறங்கும் சக்கரம் ஆகியவற்றில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. சேதம் குறித்த விரிவான மதிப்பீடு தகுந்த அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும்.
விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் விமானப் பாதுகாப்புக் குழுவினர், விசாரணை நடத்துவதற்கும், சூழ்நிலைகள், காரணிகளைக் கண்டறிவதற்கும் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
திவாஹர்
