உயிரித் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றால் ஏற்படும் அடுத்த தொழிற்புரட்சியில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட கடந்த தொழிற்புரட்சியில் இந்தியா தாமதமாகப் பங்கேற்றது போலல்லாமல், உயிரித்தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட அடுத்த தொழிற்புரட்சியில் இந்தியா ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பம்த் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தெரித்துள்ளார்.

ஊடக மாநாடு ஒன்றில் பேசிய அவர், பயோஇ3 (BiOE3) எனப்படும் பிரத்யேக உயிரித்தொழில்நுட்பக் கொள்கையைக் கொண்டுள்ள உலகின் முதல் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும் என்றார். மேலும், நம்மிடம் தேசிய குவாண்டம் திட்டம், இந்திய செயற்கை நுண்ணறிவுத் திட்டம் ஆகியவை உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். அத்துடன், விண்வெளி போன்ற பிற முன்னணித் துறைகளிலும் நாம் விரைவான முன்னேற்றங்களை அடைந்துள்ளோம் என அவர் கூறினார். முன்னதாக ஏறக்குறைய பூஜ்ஜியம் ஆக இருந்த இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம், தற்போது சுமார் 9 பில்லியன் அமெரிக்க டாலராக வளர்ந்துள்ளது என்றும், அடுத்த எட்டு முதல் ஒன்பது ஆண்டுகளில் இது 40-45 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

பாரம்பரிய உற்பத்தித் துறையுடன், உயிரித் தொழில்நுட்பம், சுழற்சிப் பொருளாதாரம், மறுசுழற்சி, பிற தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் துறைகள் போன்ற வளர்ந்து வரும் துறைகளை நோக்கி உலகப் பொருளாதாரம் படிப்படியாக மாறி வருவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். தொழில்துறை மாற்றத்தின் அடுத்த கட்டம், செயற்கை நுண்ணறிவு, உயிரித் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். தொழில்நுட்பத்தை திறம்படப் பயன்படுத்தும் திறன், இளம் இந்தியர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

Leave a Reply