பிராந்திய ராணுவம் எல்லையைப் பாதுகாப்பதிலும் உள்நாட்டு பாதுகாப்பை பராமரிப்பதிலும் சிறப்பாக செயல்படுகிறது-மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.

பாதுகாப்பு அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் 2026 ஆகஸ்ட் 6 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிராந்திய ராணுவம் குறித்து விவாதிக்கப்பட்டது. பிராந்திய ராணுவத்தின் பங்களிப்பு, முக்கியச் சாதனைகள் தொடர்பாகக் குழு உறுப்பினர்களுக்கு உயர் அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்தனர். அப்போது அப்படையை மேலும் வலுப்படுத்தவும் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்தவும் உறுப்பினர்கள் மதிப்புமிக்க ஆலோசனைகளை அளித்தனர்.

அப்போது உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப்பார்வையை முன்னெடுத்துச் செல்வதில் பிராந்திய ராணுவத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது என்று கூறினார். பாதுகாப்புப் படைகளின் முதன்மையானப் பணி பாதுகாப்பு தொடர்பானவையாக இருந்தாலும், பிராந்திய ராணுவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூகப் பணி ஆகிய இதர துறைகளிலும் பங்களிப்பு செய்கிறது என்று அவர் குறிப்பிட்டார். பிராந்திய ராணுவம் என்பது குடிமகன் – ராணுவ வீரர் என்ற கோட்பாட்டின் சான்றாக திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார். அதன் உறுப்பினர்கள் தங்களுடைய அன்றாட குடிமைப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சூழலில் எல்லைகளைப் பாதுகாக்கவும், உள்நாட்டு பாதுகாப்பைப் பராமரிக்கவும் பணியாற்றுவதாக அவர் கூறினார்.

Leave a Reply