குடியரசுத் தலைவரின் மெய்க்காவலர்களை போற்றும் சோல்ஜரத்தான் மாரத்தான் ஓட்டம் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்கள், இன்று (ஆகஸ்ட் 2, 2026) குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவரின் மெய்க்காப்பாளர்களுக்கான மாரத்தானை காணொலிக் காட்சி வாயிலாகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த முன்முயற்சியின் புரவலரான மிசோரம் ஆளுநர் வி.கே. சிங் முன்னிலையில் இந்த ஓட்டத்தை அவர் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில் சிறப்பு அஞ்சல் உறையையும் குடியரசுத் தலைவர் வெளியிட்டார். இந்தப் போட்டி டெல்லி கண்டோன்மென்ட்டில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்றது.

‘வீரர்களுக்காக ஓடுங்கள், வீரர்களுடன் ஓடுங்கள்’ என்ற தொலைநோக்குப் பார்வையின் வழிகாட்டுதலுடன், பொதுமக்களுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்த இந்த ஓட்டம் ஒரு தனித்துவமான தளமாக விளங்குகிறது. ‘உண்மையான நாயகர்களான இந்திய ஆயுதப் படைகளுக்கு ஆதரவளித்தல்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட இந்த நிகழ்வு, நமது வீரர்களின் அர்ப்பணிப்பு, துணிவு, தியாகம் ஆகியவற்றுக்கு மரியாதை செலுத்துவதோடு, மக்கள் தங்கள் தீவிரப் பங்கேற்பின் மூலம் ராணுவ வீரர்களுடன் இணைந்து ஒற்றுமையை வெளிப்படுத்தவும் இது ஊக்குவிக்கிறது.

மாரத்தான் ஓட்டம் 3 கி.மீ, 5 கி.மீ, 10 கி.மீ என மூன்று பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. சோல்ஜரத்தானின் வருமானம், ஆயுதப் படைகளின் முடக்குவாத மறுவாழ்வு மையம், போரில் காயமடைந்தவர்களின் வாரிசுகளின் நலன் போன்றவற்றுக்கு ஆதரவளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

Leave a Reply