காவிரி நதிநீர் திறப்பு, மேகதாது அணைப்பிரச்சனை மற்றும் மலைவாழ் மக்களின் நலன் ஆகியவற்றிற்காக புதிய தமிழகம் கட்சி கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம் தமிழக மக்கள் நலன் காக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

ஜி.கே.வாசன்.

மேகதாது அணைப்பிரச்சனை, காவிரி நதிநீர் திறப்பு தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி அவர்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியிருக்கிறார்கள்.

மேகதாது அணைப்பிரச்சனை என்பது தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சனை. டெல்டா விவசாயிகளின் உயிர்நாடிப் பிரச்சனை.

காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீரை உடனடியாகப் பெறுவதற்கும், மேகதாது அணைப்பிரச்சனையை அரசியலைக் கடந்து கர்நாடகாவில் அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு நிற்பது போல் தமிழகத்திலும் அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு நின்று தமிழகத்தின் கோரிக்கையை வென்றெடுக்க வேண்டும்.

மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடியிருப்பு பிரச்சனையில் அவர்களின் நலன் காக்க, தமிழக அரசோடு பேச்சு வார்த்தை நடத்த, தீர்வு காண தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) துணை நிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply