போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கங்களை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் காவல், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் ஆகிய துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகள் ஆளிநர்களுக்கு 2023 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையில் அறிவிக்கப்பட்ட இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்ததுடன், ரூ.8.27 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட கடலோரப் பாதுகாப்புக் குழுமத்திற்கான புதிய 42 நான்கு சக்கர மற்றும் 96 இருசக்கர ரோந்து வாகனங்களின் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

Leave a Reply