இந்தியா – மாலத்தீவு இடையே எல்லை தாண்டிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவை தொடக்கம்.

மாலத்தீவின் உடனடிப் பணப்பரிவர்த்தனை அமைப்பான ஃபவாரா, இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகமன யுபிஐ ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு நேற்று முதல் (2026 ஜூலை 30) வெற்றிகரமாகச் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக மாலத்தீவு நிதி ஆணையம் அறிவித்துள்ளது.

இது, மாலத்தீவிற்கும், இந்தியாவிற்கும் இடையேயான எல்லை கடந்த டிஜிட்டல் நிதி பரிவர்த்தனையிலும் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பிலும் ஒரு புரட்சிகரமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

இதன் முக்கிய அம்சங்கள்:

· இந்த புதிய சேவையானது, மாலத்தீவில் உள்ள தனிநபர்கள், ஃபவாராவைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள பயனாளிகளுக்கு உடனடியாக பணப்பரிமாற்றம் செய்ய உதவுகிறது.

· பரிவர்த்தனைகள் மாலத்தீவு ருஃபியாவில் தொடங்கப்பட்டு, யுபிஐ மூலம் பெறுபவர்களுக்கு இந்திய ரூபாயில் வரவு வைக்கப்படும்.

· இந்தச் சேவையானது, பேங்க் ஆஃப் மால்தீவ்ஸ், மால்தீவ்ஸ் இஸ்லாமிக் பேங்க் ஆகிய இரண்டு உள்ளூர் வங்கிகளின் பங்கேற்புடன் தொடங்கப்பட்டுள்ளது.

கம்போடியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், மொரிஷியஸ், நேபாளம், பூட்டான், கத்தார், இலங்கை ஆகிய நாடுகளில் இந்தியாவில் யுபிஐ மூலம் ஏற்கனவே தடையின்றி பணப்பரிமாற்றம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply