மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, ஜூலை 16,2026 அன்று பெங்களூரு பிராந்திய குறிப்பு தர ஆய்வகத்தில் (ஆர். ஆர். எஸ். எல்) அதிவேக இணையம் மற்றும் உயர் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் ‘ஒயிட் ரேபிட்’ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திய நேரப் பரவலாக்க கட்டமைப்பைத் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் ஒரே நேரத்தைப் பராமரிக்க இது வகை செய்கிறது.
நுகர்வோர் விவகாரங்கள் துறை, சிஎஸ்ஐஆர்-தேசிய இயற்பியல் ஆய்வகம் (சிஎஸ்ஐஆர்-என். பி. எல்) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இணைந்து உருவாக்கிய இந்த செயல்முறை கட்டமைப்பு, துல்லியமான நேர நெறிமுறையைப் பரவலாக்குவதை அடிப்படையாகக் கொண்ட வெள்ளை முயல் எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி யுடிசி (என். பி. எல். ஐ)-கண்டறியக்கூடிய இந்திய நிலையான நேரத்தை பாதுகாப்பாக பரப்ப உதவுகிறது.
சிஎஸ்ஐஆர்-என்பிஎல், இஸ்ரோ, செபி, தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) பிஎஸ்என்எல் மற்றும் பிற பங்குதாரர்களுடன் இணைந்து நுகர்வோர் விவகாரத்துறை, ஆர்ஆர்எஸ்எல் பெங்களூரு மற்றும் என்எஸ்இ சென்னை இடையே இந்திய நிலையான நேரத்தைப் பாதுகாப்பாகப் பரப்புவதற்கான சரிபார்ப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். முன்னதாக, சிஎஸ்ஐஆர்-தேசிய இயற்பியல் ஆய்வகம் (சிஎஸ்ஐஆர்-என். பி. எல்) இஸ்ரோ மற்றும் பிற பங்குதாரர் நிறுவனங்களுடன் இணைந்து நுகர்வோர் விவகாரத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் இந்திய நிலையான நேர பரவலாக்கத் திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்ய திரு ஜோஷி பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (இஸ்ரோ) வருகை தந்தார்.
எஸ்.சதிஸ் சர்மா
