ஜம்மு-காஷ்மீரின் தோட்டக்கலை ஏற்றுமதிகளுக்கு மற்றொரு குறிப்பிடத்தக்க ஊக்கமளிக்கும் வகையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (அபேடா), ஷோபியான் மற்றும் புல்வாமாவிலிருந்து சிங்கப்பூருக்கு பிரீமியம் அரேகோ செர்ரி (உயர் அடர்த்தி கொண்ட ஐரோப்பிய இனிப்பு செர்ரி) மற்றும் சென்ட்ரோஸ் பிளம்ஸ் பழங்களை ஏற்றுமதி செய்ய உதவியது. இப்பகுதியில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி மற்றும் துபாய்க்கு புதிய செர்ரி மற்றும் பிளம்ஸ் வெற்றிகரமாக ஏற்றுமதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த மைல்கல் நிகழ்வு அமைந்துள்ளது. இது காஷ்மீரின் பிரீமியம் பழங்களின் உலகளாவிய தடத்தை மேலும் விரிவுபடுத்துகிறது.
ஒசம் ஃபுட் சொல்யூஷன்ஸ் எல்எல்பி, புல்வாமாவின் ஃப்ரூட் மாஸ்டர் அக்ரோ ஃப்ரெஷ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து 2026 ஜூலை 16 அன்று சிங்கப்பூருக்கான முதல் ஏற்றுமதியை அபேடா மேற்கொண்டது.
ஜம்மு & காஷ்மீர், அதன் சாதகமான வேளாண்-பருவ நிலைமைகளுக்கு பெயர் பெற்றது, சிறந்த சுவை, அமைப்பு மற்றும் அடுக்கு ஆயுள் கொண்ட உயர்தர பழங்களை உற்பத்தி செய்கிறது. ஏற்றுமதி சரக்கு சிங்கப்பூருக்கு வந்தவுடன் புத்துணர்ச்சியையும் தரத்தையும் உறுதி செய்வதற்காக சர்வதேச உணவு பாதுகாப்பு மற்றும் பைட்டோசானிட்டரி தரங்களுக்கு இணங்க ஒரு திறமையான குளிர் சங்கிலி மூலம் அறிவியல் ரீதியாக அறுவடை செய்யப்பட்டு, தரப்படுத்தப்பட்டு, பேக் செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது.
எஸ்.சதிஸ் சர்மா
