நில வளத் துறையின் அறிவுசார் ஒத்துழைப்பு அமைப்பாக செயல்படும் தேசிய மழைநீர் பாசனப் பகுதி ஆணையம், உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்படும் ரிவார்ட் (REWARD) எனப்படும் புதுமையான முயற்சிகள் மூலம் வேளாண்மை மீள்திறனுக்காக நீர்நிலைகளைப் புத்துயிர் பெறச் செய்தல் என்ற திட்டத்தின் கீழ், “நீர்நிலைத் திட்டமிடல், கண்காணிப்பு ஆகியவற்றுக்காக செயற்கைக்கோள், ட்ரோன் அடிப்படையிலான ஆய்வு” என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் பயிலரங்கை ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நேற்று (15.07.2026) ஏற்பாடு செய்தது.
ரிவார்ட் திட்டப் பொறுப்பாளர் டாக்டர் சுசாமா சுதிஸ்ரீ, பங்கேற்பாளர்கள் அனைவரையும் வரவேற்று, பயிலரங்கின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.
தேசிய மழைநீர் பாசனப் பகுதி ஆணைய தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் சந்திர சேகர் குமார் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்பித்தார். பல்வேறு பிராந்தியங்களில் நீர்நிலைப் பகுதிகளின் திட்டமிடல், செயல்படுத்துதல், கண்காணித்தல், மதிப்பீடு செய்தல் ஆகியவற்றுக்காக, செயற்கைக்கோள், ட்ரோன் அடிப்படையிலான கணக்கெடுப்புகளை முறையாகப் பயன்படுத்துவது குறித்து தெளிவான வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.
திவாஹர்
