திருத்தப்பட்ட உடான் திட்டம் குறித்த பயிலரங்கை சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தொடங்கி வைத்தார்.

உடான் திட்டத்தின் அடுத்தக் கட்டம் குறித்த பயிலரங்கிற்கு விமானப்போக்குவரத்து அமைச்சகம், புதுதில்லியில் உள்ள விஞ்ஞான்பவனில் ஏற்பாடு செய்திருந்தது. நாட்டின் பிராந்திய விமானப்போக்குவரத்துக்கான எதிர்கால வழிவகைகள் குறித்து விவாதிக்க விமானப்போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த முக்கிய பங்குதாரர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இப்பயிலரங்கை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு கிஞ்சரப்பு தொடங்கி வைத்தார்.

நாட்டின் பிராந்திய விமானப்போக்குவரத்தை மேம்படுத்துவதில் இத்திட்டத்தின் சாதனைகளை வெளிப்படுத்தும் உடான் குறித்த டிஜிட்டல் கண்காட்சியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் பேசிய திரு ராம் மோகன் நாயுடு கிஞ்சரப்பு, பிராந்திய விமானப் போக்குவரத்து இணைப்பை விரிவுபடுத்துதல், விமானப் போக்குவரத்தின் பயன்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சென்றடைவதை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கான அரசின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்தார்.

2001-ம் ஆண்டு நாட்டில் 65 விமான நிலையங்கள் இருந்த நிலையில், அடுத்த 13 ஆண்டுகளில் 9 விமான நிலையங்கள் அதிகரித்து 74 விமான நிலையங்கள் இருந்ததாகக் கூறினார். கடந்த 12 ஆண்டுகளில் கூடுதலாக 90 விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Leave a Reply