வடகிழக்கு பருவமழை; மீட்பு நடவடிக்கைகளுக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு நடவடிக்கைகளுக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்போது நிலவிவரும் வானிலை நிலவரம் குறித்தும், பேரிடர் மேலாண்மைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு முன்னெடுப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டமும் நடைபெற்றது.

Leave a Reply