கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவரின் உறவினர், விஜய்யை சந்திக்காமல் இருக்க உள்ளூர் திமுக பிரமுகர் ₹30 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் “Dakshin Digital Media Private Limited” என்ற நிறுவனத்தின் சார்பில் வெளிவரும் “”The South First ” என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (அக்டோபர் 27 திங்கள்கிழமை) கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்தார். கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடந்தது, அங்கு விஜய் ஒவ்வொரு குடும்பத்தினருடனும் அரை மணி நேரம் வரை பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்ட குடும்ப உறுப்பினர்கள், விஜய் அவர்களுடன் பேசும்போது மனம் உடைந்து அழுததாக எங்களிடம் தெரிவித்தனர். கூட்டத்திற்கு முந்தைய நாள் வரை, விஜய்யைச் சந்திக்க வருவதைத் தடுக்க ₹30 லட்சம் வரை சலுகைகளுடன் தங்களை அணுகி உள்ளூர் திமுக பிரமுகர் லஞ்சம் கொடுத்ததாகவும், மாமல்லபுரம் வருவதற்கு முந்தைய நாள், ஆளும் திமுகவின் உள்ளூர் பிரமுகர் தனது உறவினர்களைத் தொடர்பு கொண்டு, விஜய்யுடன் கூட்டத்தில் கலந்து கொள்வதைத் தடுக்க ₹30 லட்சம் லஞ்சம் வழங்கியதாக அதே குடும்ப உறுப்பினர் குற்றம் சாட்டியதாக “The South first” இணையதளத்தில் செய்தி வெளியாகி உள்ளது.
the South first இணையதளத்தில் வெளிவந்தச் செய்தியை முழுமையாக படிக்க கீழ்காணும் இணைப்பை “கிளிக்” செய்யவும்.
“the South first” இணையதளம் வெளியிட்டுள்ள இந்த செய்தியின் உண்மைத் தன்மை குறித்து கரூர் துயரச் சம்பவத்தை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் முழுமையாக விசாரிக்க வேண்டும். மேலும், கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு உரிய பாதுகாப்பை சிபிஐ அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040
