திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் (பிம்) 33-வது பட்டளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் (பிம்) 33-வது பட்டளிப்பு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமி கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ – மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மொத்தம் 197 பேர் பட்டம் பெற்றனர்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியது: “இந்தியாவிலேயே உயர் கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் இருக்கிறது. உயர் கல்வி சேர்க்கை விகிதம், என்ஐஆர்எஃப் தரவரிசை என பல குறியீடுகள் அதற்கு சான்றாக உள்ளன. இப்படி உயர் கல்வியில் தமிழகம் சிறக்க காரணம் யார்? ஒரு காலத்தில் கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து, இன்றைக்கு படித்து முன்னேறி, உலகம் முழுவதும் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறோம் என்றால், அதற்கு காரணம் திராவிட இயக்கம்.

இந்த அடித்தளத்தில், உயர் கல்வியில் தலைசிறந்த தமிழகத்தை கட்டமைத்தவர் கருணாநிதி. உயர் கல்விக்கு என்று ஏராளமான திட்டங்கள் – கல்விக் கட்டணச் சலுகைகள், புதிய பல்கலைக்கழகங்கள் – நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் என்று உயர் கல்விக்காக அதிகமாக செய்தார்.

Leave a Reply