தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி கடந்த மூன்று நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வவு அறிக்கையின்படி சராசரியாக 56.61 மி.மீட்டர் மழை பெய்து இருக்கிறது.
இப் பெரும் மழையால் சாதாரண மக்களும், சிறு, குறு, வியாபார நிறுவனங்களும், பெரும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். மழைக் காலங்களில் ஏற்படும் நோய் தொற்றில் இருந்து மக்களை காக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் அரசு முகாம்கள் அமைத்து பாதிக்கபட்ட மக்களுக்கு உணவு, மருத்துவ வசதிகளை தொடர்ந்து அளிக்க வேண்டும்.
கடும் மழையின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் அதிக அளவில் சேதம் அடைந்திருக்கிறது. கரும்பு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை காலதாமதம் இல்லாமல் கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கையை எடுக்க வெண்டும்.
தமிழகம் முழவதும் பாதிக்கபட்ட மக்களையும், விவசாய மக்களையும் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு தக்க நேரத்தில் உதவிகரம் நீட்டும் வகையிலே பருவமழை கண்காணிப்பு அதிகாரிகளை உடனடியாக நியமனம் செய்து அவசரகால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தமிழக அரசை வலியுறுத்துகிறது.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா
