நாட்டுக்கே வழிகாட்டும் ஏராளமான திட்டங்களை திராவிட மாடல் அரசு உருவாக்கியுள்ளது. கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பாக உள்ளது என்று கிராமசபை கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தில், நீங்கள் முன்வைக்கின்ற ஒவ்வொரு பரிந்துரையும் பல்வேறு திட்டங்கள் மூலம் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.
தமிழகம் முழுவதும் இன்று காலை 12480 கிராம சபை கூட்டங்களில் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: என்றைக்கும் மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றக்கூடிய இந்த எண்ணத்தை நமக்குள் விதைத்தவர் அண்ணா. அவர்தான் மக்களிடம் செல், அவர்களிடம் வாழ், அவர்களிடம் இருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்கு சேவை செய் என்று நமக்கு கட்டளையிட்டு நம்மையெல்லாம் ஆளாக்கியவர். அண்ணா காட்டிய பாதையில்தான் கலைஞர் சமூகநீதி, சமத்துவம், சமதர்மம் போன்ற உயர்ந்த லட்சியங்களை செயல்படுத்துவதை நோக்கமாக கொண்டு திமுக ஆட்சிகளை வழிநடத்தினார்.
கே.பி.சுகுமார்
