தமிழ்நாட்டின் மிக நீளமான 10.10 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நான்கு வழித்தட மேம்பாலத்திற்கு “ஜி.டி. நாயுடு மேம்பாலம்” என்று பெயர் சூட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையை சார்ந்த தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் கோயம்புத்தூர், குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ. 126.12 கோடி மொத்த திட்ட மதிப்பீட்டில், முதற்கட்டமாக ரூ. 81.40 கோடி மதிப்பீட்டில் ஐந்து தளங்களுடன் அமைக்கப்படவுள்ள தங்கநகை பூங்கா திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, பொற்கொல்லர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Leave a Reply