திருச்சியில் உள்ள திருவெறும்பூரில் பாதாளச் சாக்கடைப் பணியின்போது மூச்சுத்திணறலால் இரண்டு துப்புரவுத் தொழிலாளர்கள் இறந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர், முத்துநகர் பகுதியில் உள்ள கார்மல் கார்டன் அருகே புதிதாகக் கட்டப்பட்ட பாதாளச் சாக்கடைப் பணியின்போது, செப்டம்பர் 22, 2025 அன்று மூச்சுத்திணறல் காரணமாக இரண்டு துப்புரவுத் தொழிலாளர்கள் இறந்ததாக வெளியான ஊடகச் செய்தி குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து நடத்துகிறது.

செப்டம்பர் 23, 2025 அன்று வெளியான ஊடகச் செய்தியின்படி, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதா இல்லையா என்பதில் தெளிவு இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி அறிக்கை உண்மை எனில், இது ஒரு கடுமையான மனித உரிமை மீறல் என்று ஆணையம் கருதுகிறது. இதையடுத்து, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த விவகாரம் குறித்த விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஆணையம் கோரியுள்ளது. மேலும், அந்த அறிக்கையில் விசாரணையின் நிலை மற்றும் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்ட இழப்பீடு விவரங்கள் இடம்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply