பா.ம.க நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல்!-தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது!- ஜி.கே‌.வாசன் ஆதங்கம்.

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் வின் திரு ம.க.ஸ்டாலின் மீது கொலைவெறி குண்டு வீச்சு நடைபெற்றது மிகவும் கண்டிக்கத்தக்கது.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அவசர, அவசிய, கட்டாய நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது.

================ #அறிக்கை ==============

      தமிழகத்தில் அரசியல் கட்சியினரின் பாதுகாப்பில் சட்டம் ஒழுங்கின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது.

கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக பகல், இரவு என எந்த நேரத்திலும் கொலை நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது.

இதற்கு காரணம் குற்றம் செய்பவர்களுக்கு காவல்துறையின் மீதும், சட்டம் ஒழுங்கின் மீதும் பயம் இல்லாததே.

நேற்று கூட தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் திரு. ம.க.ஸ்டாலின் அவர்கள் மீது கொலை வெறி குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஆடுதுறை பேரூராட்சி தலைவராக பா.ம.க வைச் சேர்ந்த ம.க.ஸ்டாலின் மக்கள் நலன் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

ம.க.ஸ்டாலின் அவர்கள் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் இயக்கப்பணி சம்பந்தமாக, மக்கள் நலப்பணி சம்பந்தமாக பேசிக்கொண்டிருக்கும் போது பெட்ரோல் குண்டு வீச்சு நடந்ததும், அரிவாளால் தாக்குதல் நடந்ததும் கொடுமையிலும் கொடுமை.

இந்த தாக்குதலில் இருந்து ம.க.ஸ்டாலின் அவர்கள் தப்பியது அதிருஷ்டவசமானது.

     இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்து விரைவில் குணமடைய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

     இந்த குண்டுவீச்சு அசம்பாவிதத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்.

      தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பது இருக்கிறதா என்றே தெரியவில்லை.

காரணம் காவல்துறையினர் மீது பயமே இல்லாமல் சர்வசாதாரணமாக கொலைக்கான சம்பவங்கள் பட்டப்பகலில் நடைபெறுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சியினர் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் அரசியல் கட்சியினருக்கான பாதுகாப்பில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் தமிழக அரசு குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் இரவு பகல் பாராமல் காவல்துறையினரை 24 மணிநேர ரோந்து பணியில் ஈடுபடுத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply