தற்சார்பு மற்றும் வளர்ச்சியை நோக்கிய இந்தியாவின் பயணத்தின் மையமான தேசிய கல்விக் கொள்கை 2020-ன் முக்கியத்துவம் குறித்து மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார் .
மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தனது சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:
“மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், இந்தியாவின் தற்சார்பு மற்றும் வளர்ச்சியை நோக்கிய பயணத்தின் மையமான தேசிய கல்விக் கொள்கை 2020-ன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறார். பிரதமரின் இ-வித்யா, திக்ஷா மற்றும் ஸ்வயம் போன்ற தளங்களின் உதவியுடன் இன்றைய ஆசிரியர்கள் டிஜிட்டல் வகுப்பறைகள், செயற்கை நுண்ணறிவு , மாறிவரும் பாடத்திட்டங்கள் மற்றும் பல்வேறு கற்றல் தேவைகளை விரைவாக ஏற்றுக்கொண்டு வருகிறார்கள் என்று அவர் விளக்குகிறார்.”
எம்.பிரபாகரன்
