இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.124.97 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறையானது தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்குகள் நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், ஒருகால பூஜை திட்டம் விரிவாக்கம், கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல், அன்னதானத் திட்டம் விரிவாக்கம், கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில் திருப்பணிகளுக்கு நிதியுதவி வழங்குதல், துறையின் செயல்பாடுகளை கணினிமயமாக்குதல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது.
எஸ்.திவ்யா
