இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ட்ராய் தனிப்பட்ட முறையில் 2025 ஜூன் மாதத்தில் கோயம்புத்தூர் நகரில் விரிவான நகர வழித்தடங்கள் உள்ளடக்கிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ட்ராய் மண்டல அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நகர்ப்புற மண்டலங்கள், ஹாட் ஸ்பாட்கள், கிராமப்புற குடியிருப்புப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டு பகுதிகளில் மொபைல் நெட்வொர்க் செயல்திறனை அறிய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
2025 ஜூன் 24 முதல் 2025 ஜூன் 27 வரை, ட்ராய் குழுக்கள் 409.7 கி.மீ தூரம் நகர பகுதிகளிலும், 4.3 கி.மீ நடைப்பயிற்சி சோதனை மற்றும் 8 ஹாட்ஸ்பாட் இடங்களில் விரிவான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 2G, 3G, 4G மற்றும் 5G ஆகிய உள்ளிட்ட தொழில்நுட்பம் குறித்து இந்த ஆய்வின் போது மதிப்பிடப்பட்டது. இது பல கைபேசி பயனர்களின் சேவை அனுபவத்தை எடுத்துரைக்கிறது.
கோயம்புத்தூர் நகரத்தில் ஒட்டுமொத்த மொபைல் நெட்வொர்க் செயல்திறன் கீழே வழங்கப்பட்டுள்ளது.
(5ஜி/4ஜி/3ஜி/2ஜி) தானியங்கி தேர்வு முறையில் அழைப்பு வெற்றி விகிதம் – ஏர்டெல்-லில் 100%-ஆகவும், பிஎஸ்என்எல்-லில் 90.71%-ஆகவும், ஆர்ஜேஐஎல்-லில் 99.85%-ஆகவும் மற்றும் விஐஎல்-லில் 99.55%-ஆகவும் உள்ளது.
(5ஜி/4ஜி/3ஜி/2ஜி) தானியங்கி பயன்பாட்டு முறையில் கால் டிராப் விகிதம் – ஏர்டெல்-லில் 0.15%-ஆகவும், பிஎஸ்என்எல்-லில் 3.04%-ஆகவும், ஆர்ஜேஐஎல்-லில் 0.15%-ஆகவும் மற்றும் விஐஎல்-லில் 0.15%-ஆகவும் உள்ளது.
கோயம்புத்தூர் நகரில், துடியலூர், கவுண்டர் நூற்பாலை, செல்வபுரம், கோவைப்புதூர், மலுமிச்சம்பட்டி, போத்தனூர், கல்லாப்பாளையம், இருகூர், அரசூர், காளப்பட்டி, கணபதி மற்றும் சவுரி பாளையம் போன்ற பகுதிகளில் மத்திப்பாய்வு நடைபெற்றது.
கோயம்புத்தூர் விமான நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காந்திபுரம் பேருந்து நிலையம், ஈஷா அறக்கட்டளை, பேரூர் பட்டேஸ்வர சுவாமி கோயில் பிஎஸ்ஜி மருத்துவமனை, சரவணம்பட்டி, நிலையான பயனர் அனுபவத்தை பிரதிபலிக்கும் வகையில் சாந்தி சமூக சேவை நிறுவனம் உள்ளிட்ட பகுதிகளில் ட்ராய் மதிப்பீடு செய்தது.
ட்ராய் பரிந்துரைத்த உபகரணங்கள் மற்றும் நிகழ்நேர சூழல்களில் தரப்படுத்தப்பட்ட நெறிமுறைகளைப் பயன்படுத்தி மதிப்பாய்வு நடைபெற்றது. இது குறித்த விரிவான அறிக்கையை ட்ராய் இணையதளமான www.trai.gov.in இல் காணலாம். ஏதேனும் தெளிவுபடுத்தல்/தகவல்களுக்கு, (ஆலோசகர், மண்டல அலுவலகம், ஹைதராபாத்) திரு பி. பிரவீன் குமார் adv.hyderabad@trai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது +91-40-23000761 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
திவாஹர்
