இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக உறவை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும், இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிவது தொடர்பாக முன்னணி அமெரிக்க நிறுவனங்களை வரவேற்றும் மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் நியூயார்க்கில் இந்த வாரம் பல்வேறு அமெரிக்க நிறுவனங்களின் உயர் பிரதிநிதிகளுடன் தொடர் கூட்டங்களில் பங்கேற்றார்.
அப்போது, பிளாக்ஸ்டோன் நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான திரு ஜொனாதன் கிரே, பிளாக்ஸ்டோனின் தனியார் பங்கு வர்த்தகப் பிரிவின் தலைவர் திரு பிரகாஷ் மெல்வானி ஆகியோரை திரு கோயல் சந்தித்தார். இந்தியாவில் முக்கிய துறைகளில் பிளாக்ஸ்டோன் கூட்டாண்மைகளையும் விரிவுபடுத்துவது தொடர்பாக அப்போது விவாதிக்கப்பட்டது.
நியூபெர்கர் பெர்மன் நிறுவனத் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான திரு ஜார்ஜ் வால்கர், அந்நிறுவன தலைமைக் குழுவின் மூத்த உறுப்பினர்கள் ஆகியோரை அமைச்சர் சந்தித்தார். முதலீடுகளை வலுப்படுத்துவது குறித்தும் நிதி, சொத்து மேலாண்மை சேவைகளில் ஈடுபடுவதை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
திவாஹர்
