கடலூர் மாவட்டம் செங்மங்குப்பம் பகுதியில் ரயில்வே பாதையை கடக்க முயன்ற பள்ளி வாகனத்தின் மீது இரயில் மோதி மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
இரயில்வே கேட்டை மூடாததால் விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது. இதில் உரிய விசாரனை செய்து உண்மை நிலைக்கு ஏற்றவாறு தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடைபெறாதவாறு உரிய பாதுகாப்பு வசதிகளை இரயில்வேதுறை அதிகப்படுத்த வேண்டும்.
மாணவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினரை நினைக்கும் போது மிகவும் வருத்தம் அளிக்கிறது. வாகன ஓட்டுனர்கள் இரயில்வே பாதையை கடக்கும் முன் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதோடு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயணிக்கும் வாகனங்களை இயக்குபவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடும், பாதுகாப்போடும் இருக்க வேண்டும்.
விபத்தில் உயிரிழந்த மாவணவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு அரசு அறிவித்த நிவாரண தொகை போதுமானதல்ல. நிவாரணத் தொகையை அதிகமாக வழங்க வேண்டும், காயம் அடைந்தவர்களுக்கு மேலும் உரிய உயர்சிகிச்சை அளிக்க வேண்டும். சிக்சையில் இருப்பவர்கள் பூரண குணம் அடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லா வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா
