பொது மக்களுக்கு காவல்துறை நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்!- ஜி.கே.வாசன் அறிக்கை.

சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகில் உள்ள மடப்புரத்தை சேர்ந்த திரு. அஜித்குமார் அவர்கள் திருட்டு வழங்கில் திருபுவனம் காவல்துறையினரால் விசாரனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் மரணம் அடைந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் காவல்துறையினர் கடுமையாக தாக்கப்பட்டதில் திரு. அஜித்குமார் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. குற்றங்கள் குறைய வேண்டுமென்றால் தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதை சட்டத்தின் அடிப்படையில் தான் நிறைவேற்ற வேண்டுமே தவிர இதுபோல் இருக்க கூடாது.

ஆனால் விசாரனையின் போதே உயிர் போகும் அளவிவிற்கு கடுமையாக தாக்குவதை பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த அராஜகச் செயலில் ஈடுபட்ட காவல்துறையினரை பணியிடை நீங்கம் செய்வது மட்டுமே சரியான தீர்வாகாது. அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து உரிய தண்டனையை வழங்க வேண்டும்.

“லாக்கப் மரணங்களால்” தமிழக அரசிற்கு இழுக்கு ஏற்படும் என்பதற்காக நடைபெற்ற மரணங்களின் வழக்கு நீர்த்துபோகும் வகையில் அவற்றை திசைதிருப்பாமல் உரிய விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பாராபட்டசம் காட்டாமல் நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும்.

தமிழக முதல்வர் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையில் கடந்த நான்கு ஆண்டுகளில் 24 காவல் நிலைய மரணங்கள் ஏற்பட்டு மக்களிடையே மிகுந்த வருத்தத்தையும், அச்சத்தையும் ஏற்டுத்தி இருக்கிறது,. தமிழக அரசு திருபுவனம் காவல்துறையினர் மீது உரிய விசாரணை செய்து மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுதர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

மரணமடைந்த திரு. அஜித்குமார் அவர்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தமிழ் மாநில காங்கிரல் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply