தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 26) திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “நான் கோட்டையிலிருந்து மட்டும் பணிகளைச் செய்யவில்லை. தொடர்ந்து மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன்.
குறைந்தது ஒரு மாதத்துக்கு மூன்று மாவட்டங்களுக்குச் செல்கிறேன். இந்த மாதத்தில் மட்டும் சேலம், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அடுத்து, இப்போது திருப்பத்தூருக்கு வந்திருக்கிறேன். இன்றைக்கு காலையில் கூட திருப்பத்தூருக்கு என்னென்ன தேவைகள் என்று கேட்டேன், கேட்டுவிட்டு, அறிவிப்பு செய்யாமல் இருக்க முடியுமா? அதனால் தான் இந்த மாவட்டத்துக்கான ஐந்து அறிவிப்புகளை வெளியிடுகிறேன்
தமிழ்நாட்டில் மதத்துக்கு ஆபத்து என்று அதிமுகவை வைத்துக்கொண்டு, பாஜகவினர் பேசுகிறார்கள். உண்மையில், தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு தான் ஆபத்து. மிஸ்டு கால் கொடுத்தும் கட்சியை வளர்க்க முடியாமல் போனவர்கள், தங்களின் அரசியல் லாபத்துக்கு கடவுள் பெயரை ‘மிஸ்-யூஸ்’ செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் போலி பக்தியை அரசியல் நாடகத்தை இங்கு யாரும் ஏற்க மாட்டார்கள்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 26) திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “நான் கோட்டையிலிருந்து மட்டும் பணிகளைச் செய்யவில்லை. தொடர்ந்து மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன்.
குறைந்தது ஒரு மாதத்துக்கு மூன்று மாவட்டங்களுக்குச் செல்கிறேன். இந்த மாதத்தில் மட்டும் சேலம், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அடுத்து, இப்போது திருப்பத்தூருக்கு வந்திருக்கிறேன். இன்றைக்கு காலையில் கூட திருப்பத்தூருக்கு என்னென்ன தேவைகள் என்று கேட்டேன், கேட்டுவிட்டு, அறிவிப்பு செய்யாமல் இருக்க முடியுமா? அதனால் தான் இந்த மாவட்டத்துக்கான ஐந்து அறிவிப்புகளை வெளியிடுகிறேன் என்று கூறினார்.
எஸ்.திவ்யா