நாட்டின் அரசியலமைப்பை காக்க வேண்டும் என்ற இந்தியா கூட்டணியின் வேண்டுகோளை மக்கள் நிறைவேற்றியுள்ளனர்
தனிப் பெரும்பான்மை பெற முடியாத பின்னடைவு பாஜகவிற்கு ஏற்பட்டுள்ளது; நரேந்திர மோடி பிரதமர் பதவியில் நீடிப்பது பொருத்தமானது இல்லை
தேசிய சனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்றிருந்தாலும் மக்களின் தீர்ப்பு மோடிக்கு எதிராக உள்ளது
நரேந்திர மோடி தலைமையில் அமைய உள்ள அரசு அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி
தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்நேரத்திலும் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது; பாஜகவை ஆட்டிப்படைக்கும் அளவிற்கு நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது
நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு மற்றும் ஏக்நாத் சிண்டே தங்களுடைய முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவது நாட்டிற்கும் சனநாயகத்திற்கும் நல்லதல்ல.
இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா
