BSNL நிறுவனம் நஷ்டத்தில் சென்றதற்கு மத்திய அரசாங்கம் கார்பரேட் நிறுவனங்களுக்கு அளித்து வரும் அதீத சலுகைகளே காரணம்! -போராட்டத்தில் ஈடுப்பட்ட ஊழியர்கள் குற்றச்சாட்டு.

20171212_102854

BSNL ஊழியர்களும் மற்றும் அதிகாரிகளும் இணைந்து கீழ்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

20171212_10225120171212_10242020171212_102210

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி BSNL கிளை தொலைபேசி நிலையத்தில் BSNL ஊழியர்களும் மற்றும் அதிகாரிகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இப்போராட்டத்திற்கு கிளைத் தலைவர் T.மதியழகன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் B.மாரிமுத்து மற்றும் மாவட்ட நிர்வாகிகள் M.பாண்டியன், நெடுஞ்செழியன், N.ஆனந்தன், பார்குகன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

BSNL நிறுவனம் நஷ்டத்தில் சென்றதற்கு மத்திய அரசாங்கம் கார்பரேட் நிறுவனங்களுக்கு அளித்து வரும் அதீத சலுகைகளே காரணமாகும். அதனால் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் உண்டு கொழுத்து வருகின்றன. மத்திய அரசு BSNL- க்கு எந்த விதமான சலுகைகளையும் வழங்க மறுத்து வருகின்றது  என்று போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் குற்றம் சாட்டினார்கள்.            

 -மு. ராமராஜ்.

 -ச.ரஜினிகாந்த்.